ஐரோப்பிய ஒன்றியத்துக்கே முழுமையாக திரும்பிவந்துவிடுங்கள்: பிரான்ஸ் அழைப்பு
Come all the way back to EU, French finance minister tells UK: ஐரோப்பிய ஒன்றியத்துக்கே முழுமையாக திரும்பிவந்துவிடுங்கள் என பிரான்ஸ் நிதியமைச்சர் பிரித்தானியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம், லேபர் கட்சியின் வருங்கால தேர்தல் அறிக்கையில், இரண்டாவது பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு சாத்தியம் என்று கூறியுள்ளார்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்...
பிரதமர் ஆன்டி பர்னாம், பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு நன்மையை விட, பாதிப்புதான் அதிகம் என்று கூறியுள்ளார்.
ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய தான் முயற்சி செய்ய விரும்புவதாகவும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.

பிரான்ஸ் அழைப்பு இந்நிலையில், பிரான்ஸ் நிதியமைச்சரான ரோலண்ட் லெஸ்கூர் (Roland Lescure), பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கே முழுமையாக திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருப்பதில் சில சிரமங்கள் இருந்தாலும், உலகம் எதிர்கொள்ளும் சவால்களை அதன் உறுப்பினர்கள் சிறப்பாக எதிர்கொள்ள அது உதவுகிறது என்றும் அமைச்சர் ரோலண்ட் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் நீடிப்பது, சுங்க ஒன்றியம் அல்லது ஒற்றைச் சந்தையில் மீண்டும் இணைவது, அல்லது முழுமையாக அதில் ஈடுபடுவது போன்ற விடயங்களை பரிசீலிக்க வேண்டும் என கடந்த வாரம் ஆன்டி பர்னாம் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் ஆன்டி பர்னாமின் கருத்துக்கள் குறித்து பிரான்ஸ் நிதியமைச்சரான ரோலண்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், பிரித்தானிய மக்கள் முடிவு செய்துவிட்டனர், அது அவர்களின் 100 சதவிகித உரிமை. அவர்கள் திரும்பி வர விரும்பினால், அதுகுறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அத்துடன், அவர்களிடம் நான் சொல்லக்கூடியது இதுதான், எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள் என்றும் கூறியுள்ளார் ரோலண்ட்.