புலம்பெயர்வோரால் லாபம் பார்க்கும் பிரபல பிரான்ஸ் நிறுவனம்
பிரான்ஸ் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிறுவனம் ஒன்று, புலம்பெயர்ந்தோரை வைத்து லாபம் பார்த்துவருவது தெரியவந்துள்ளது.
லாபம் பார்க்கும் பிரபல பிரான்ஸ் நிறுவனம்
ஆம், பிரபல விளையாட்டுப் உபகரணங்கள் நிறுவனமான Decathlon நிறுவனம், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்வோருக்கான life jacketகளை விற்பனை செய்துவருகிறது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் திட்டத்துடனிருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்வோர், பிரான்சின் துறைமுக நகரங்களில் ஒன்றான Dunkirkஇலிருக்கும் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கடைகளில் life jacketகளை வாங்க முண்டியடித்துக்கொண்டு போட்டிபோடுகிறார்கள்.
விடயம் என்னவென்றால், பிரித்தானிய அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டு மேயர்கள் கூட Decathlon நிறுவனத்தில் இந்த செயலால் கோபமடைந்துள்ளார்கள்.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிகாரிகள் Decathlon நிறுவனத்துக்குச் சொந்தமான கடைகளை கண்காணிக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஆனால், வெறுமனே life jacketகளை விற்பனை செய்வதைத் தடுப்பது மட்டும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்திவிடாது என்கின்றன புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |