இந்திய கிராமத்து இளைஞரை பாரம்பரிய முறைப்படி மணந்த பிரான்சின் பணக்கார இளம்பெண்!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பணக்கார பெண் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேரி லோரி ஹெரால் என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் பாரீஸில் தொழிலதிபராக உள்ளார். மேரி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த போது ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டி (tour guide) உடன் காதலில் விழுந்துள்ளார்.
ராகேஷ் பீகார் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். மேரி பிரான்ஸுக்கு சென்ற பின்னர் ராகேஷுடன் செல்போன் மூலம் காதலை வளர்த்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராகேஷை பாரீஸிக்கு அழைத்து சென்ற மேரி அங்கு அவருக்கு ஜவுளித் தொழிலை வைத்து கொடுத்தார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அதிகம் நேசித்த மேரி இந்தியாவில் இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இதற்கு இரண்டு பேரின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து தம்பதி சமீபத்தில் பீகாருக்கு வந்தனர். அங்கு இரு வீட்டார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ராகேஷ் - மேரி திருமணம் நடந்தது, சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்களும் திரளாக வந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
புதுமணத் தம்பதிகள் இந்தியாவில் ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் பாரிஸ் திரும்புவார்கள் என தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.