பிரான்ஸ் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: தப்பிக்க வாய்ப்புள்ளதா?
பிரான்ஸ் பிரதமர், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமலே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்ச்சைக்குரிய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மசோதாக்களை நிறைவேற்றினார்.
அதனால் கோபமடைந்துள்ள எதிர்க்கட்சிகள் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன.
கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு
வரி விதிப்புகளும், சலுகைக் குறைப்புகளும் கொண்ட தனது பட்ஜெட்டை பிரதமர் மிஷெல் பார்னியேர் தாக்கல் செய்ய முடிவு செய்தார்.
நாடாளுமன்றம் அது தொடர்பான மசோதாவை நிராகரிக்கும் என்பது உறுதியாகவே, பார்னியேர், பிரான்ஸ்அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினார்.
ஆனால், உடனடியாகவே இடதுசாரிக் கட்சியான France Unbowed (LFI) மற்றும் Marine Le Penஇன் வலதுசாரிக் கட்சியான National Rally (RN) ஆகிய கட்சிகள், தாங்கள் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தன.
ஏற்கனவே ஆளும் அரசு சிறுபான்மை அரசாக இருக்கும் நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் தோல்வியை சந்திப்பாரானால், அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தப்ப வாய்ப்புள்ளதா?
ஏற்கனவே ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், இடதுசாரிக் கட்சியான France Unbowed (LFI) மற்றும் Marine Le Penஇன் வலதுசாரிக் கட்சியான National Rally (RN) ஆகிய கட்சிகள், பிரதமருக்கெதிராக கைகோர்த்துள்ளன.
என்றாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தான் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் பார்னியேர்.
பிரான்சில் நிலவும் அரசியல் நிலையில்லாத்தன்மைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ள பார்னியேர், தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி பதவியேற்றேன். ஆனால், மறுநாளே பதவி விலக நேரிடலாம் என்ற எண்ணத்துடன்தான் இருந்தேன்.
ஆக, இது நான் அரசியல் வாழ்வில் தப்பிப்பிழைப்பதைக் குறித்த விடயம் அல்ல என்று கூறியுள்ளார் பார்னியேர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |