கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு: நாளை முடிவாகும்
பிரான்ஸ் பிரதமர், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமலே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்ச்சைக்குரிய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மசோதாக்களை நிறைவேற்றினார்.
அதனால் கோபமடைந்துள்ள எதிர்க்கட்சிகள் நாளை பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன.
கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு
வரி விதிப்புகளும், சலுகைக் குறைப்புகளும் கொண்ட தனது பட்ஜெட்டை பிரதமர் மிஷெல் பார்னியேர் தாக்கல் செய்ய முடிவு செய்தார்.
நாடாளுமன்றம் அது தொடர்பான மசோதாவை நிராகரிக்கும் என்பது உறுதியாகவே, பார்னியேர், பிரான்ஸ்அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினார்.
ஆனால், உடனடியாகவே இடதுசாரிக் கட்சியான France Unbowed (LFI) மற்றும் Marine Le Penஇன் வலதுசாரிக் கட்சியான National Rally (RN) ஆகிய கட்சிகள், தாங்கள் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தன.
ஏற்கனவே ஆளும் அரசு சிறுபான்மை அரசாக இருக்கும் நிலையில், நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் தோல்வியை சந்திப்பாரானால், அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்படி அரசு கவிழுமானால், பட்ஜெட்டும் தோல்வியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |