பிரான்சில் வீடுகளிலிருந்து பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள், வீடுகளிருந்தவண்ணமே பணி செய்வது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் இருந்தவண்ணம் சுவிஸ் அலுவலகங்களில் பணி செய்வோர் தொடர்பில் Bernக்கும் பாரீஸுக்கும் இடயில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால், பிரான்சில் வீடுகளிலிருந்து பணி செய்வோர், பிரான்சில் சமூக பாதுகாப்பு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
அந்த ஒப்பந்தம் நவம்பர் மாதத்தின் மத்தியப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் மக்கள். தற்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், அந்த ஒப்பந்தம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்று தெரியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் நிரந்தரமாக்கப்படும் வகையில், அது ஐரோப்பா மட்டத்திலான பெரிய ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பாகமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொரோனா காலகட்டத்தின்போது, பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் பக்கத்திலுள்ள நாடுகளுடன், மக்கள் பாதிக்கப்படாத வகையில் வீடுகளிலிருந்து பணியாற்றும் வகையில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.