பொதுமக்களுடைய நிதி உதவியை நாடும் பிரான்ஸ் மருத்துவமனைகள்
நிதிப்பற்றாக்குறை காரணமாக, பிரான்ஸ் நாட்டிலுள்ள மருத்துவமனைகள் சில பொதுமக்கள் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
பொதுமக்கள் உதவியை நாடும் மருத்துவமனைகள்
பிரான்சிலுள்ள மருத்துவமனைகள் சில, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் முதலான அவசரத் தேவைகளுக்காக மக்கள் உதவியை நாடியுள்ளன.

சில மருத்துவமனைகள், தங்களிடம் நோயாளிகளுக்காக போதுமான படுக்கைகள் கூட இல்லை என கூறியுள்ளன.
ஆகவே, பொதுமக்கள் தங்களுக்கு உதவவேண்டும் என சில மருத்துவமனைகள் கோரியுள்ள நிலையில், சில மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கடன் கேட்க முடிவு செய்துள்ளன.
தங்களுக்கு மக்கள் கடன் கொடுத்து உதவினால், பிறகு வட்டியுடன் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக அந்த மருத்துவமனைகள் உறுதியளித்துள்ளன.

ஒரு மருத்துவமனை, மாதம் ஒன்றிற்கு ஒரு யூரோ கொடுத்தால்கூட போதும், ஆண்டில் இறுதியில், 3.1 சதவிகித வட்டியுடன் அதை மொத்தமாக திருப்பிக் கொடுப்பதாக கூறியுள்ளது.
விடயம் என்னவென்றால், 3.1 சதவிகித வட்டி என்பது, பிரான்சின் பிரபல சேமிப்புக் கணக்கில் கொடுக்கப்படும் வட்டி வீதத்தைவிட அதிகம் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |