பிரான்சில் ராணுவ தளத்தில் பார்ட்டி நடத்திய பல்லாயிரக்கணக்கானோர்
பிரான்சில், சட்டவிரோதமாக ராணுவ தளம் ஒன்றில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி பார்ட்டி நடத்திய விடயம் தொடர்பில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
ராணுவ தளத்தில் பார்ட்டி
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிரான்சிலுள்ள Bourges என்னுமிடத்தில் ராணுவ தளம் ஒன்றில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி பார்ட்டி நடத்தியுள்ளார்கள்.
அந்த இடத்தில் வெடிக்காத இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள் மறைந்துகிடப்பதால், அவை வெடிக்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், தாங்கள் வேண்டுமென்றேதான் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததாக பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது, இதுபோல் பார்ட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கும் மசோதா ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Kenzo Tribouillard, AFP
அப்படி அனுமதியின்றி பார்ட்டி ஒழுங்கு செய்வோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க அந்த மசோதா பரிந்துரைக்கிறது.
இந்நிலையில், அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே தாங்கள் பார்ட்டி நடத்த அந்த ராணுவ தளத்தை தேர்ந்தெடுத்ததாக பார்ட்டியை ஒழுங்கு செய்தவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில், பார்ட்டி நடைபெற்ற இடத்தை ஞாயிற்றுக்கிழமையன்று பார்வையிட்ட பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Laurent Nunez, இனி இதுபோல் பார்ட்டிகள் நடப்பதை தடுக்கப்போவதாக உறுதிபூண்டுள்ளார்.
பார்ட்டி தொடர்பில் 600 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவ தளம் ஒன்றிற்குள் நுழைந்ததற்காகவும், சட்டவிரோத கூட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காகவும் பார்ட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |