குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகள் கடினமாக்கப்படும்: பிரான்ஸ் உள்துறை அமைச்சர்
குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகள் கடினமாக்கப்படும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள் கடினமாக்கப்படும்...
வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளை தான் கடினமாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சரான புரூனோ (Bruno Retailleau), வெளிநாட்டவர்கள் பிரான்சில் வாழ அனுமதி கிடைப்பது என்பது சலுகை, அது உரிமை அல்ல என்று கூறியுள்ளார்.
பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு, வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட அளவில் பிரெஞ்சு மொழிப்புலமை பெற்றிருப்பதுடன், பிரெஞ்சு சமுதாயத்துடன் முழுமையாக ஒன்றிணைந்து வாழ்வோம் என அவர்கள் உறுதியளிக்கவும் வேண்டும் என்னும் விடயங்களும் நிபந்தனைகளில் சேர்க்கப்படவேண்டும் என்றும் புரூனோ தெரிவித்துள்ளார்.
புரூனோ 2027ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஜனாதிபதியாகக்கூடும் என வதந்திகள் பரவிவரும் நிலையில், குடியுரிமை பெறுதலை கடினமாக்குதல் தொடர்பிலான நிபந்தனைகள் குறித்த சுற்றறிக்கை ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |