ஜிகாதிகளால் கடத்தப்பட்ட பிரான்ஸ் பத்திரிக்கையாளரின் வீடியோ வெளியானது!
மாலியில் ஜிகாதிகளால் கடத்தப்பட்ட பிரான்ஸ் பத்திரிகையாளர், அவரை விடுவிக்க அரசாங்கத்தால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் பத்திரிக்கையாளரான Olivier Dubois, 2015 ஆம் ஆண்டு முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது, அவர் பிரெஞ்சு பத்திரிகையான Le Point மற்றும் Liberation செய்தித்தாள் ஆகியவற்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை தன்னை விடுவிக்க பிரான்ஸ் அரசாங்கத்தால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு Olivier Dubois வலியுறுத்தும் வீடியோ வெளியானது.
இதைத்தொடர்ந்து, மாலியில் Olivier Dubois கடத்தப்பட்டதை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.
தூதர்கள் Olivier Dubois-ன் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
#Mali - French journalist Olivier Dubois kidnapped on 8 April 2021 in Gao by Nusrat al-Islam (JNIM/GSIM), linked to AQIM. The group released a 21-second video. Dubois has lived and worked in Mali since 2015. #hostage #kidnapingpic.twitter.com/FgWpwpOY3f
— Rory McKittrick (@rory_mckittrick) May 5, 2021
புதன்கிழமை வெளியான 21 நொடி வீடியோவில், நான் Olivier Dubois. பிரான்ஸை சேர்ந்த பத்திக்கையாளன். கடந்த ஏப்ரல் 8ம் திகதி மாலியின் Gao நகரில் வைத்து JNIM ஜிகாதிகளால் கடத்தப்பட்டேன்.
தன்னை விடுவிப்பதற்காக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பிரான்ஸ் அதிகாரிகளுடனும் பேசு வருவதாகவும், அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.