பிரான்சில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நபருக்கு நேர்ந்த சோகம்
பிரான்சில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுத்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைவருமான Jose Evrard தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நிலையில் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவர் Northern France பகுதியில் உள்ள Pas-de-Calais பகுதியில் வசித்து வந்தார். 76 வயதான Jose Evrard கொரோனோ கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரது மறைவிற்கு தேசிய சட்டமன்றத்தின் தலைவர் Richard Ferrand தனது ட்விட்டர் பக்கத்தில், Jose Evrard மறைவால் வாடும் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் அவரது சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இவரது மரணம் தடுப்பூசியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது என்ற கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.15 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.