பிரான்ஸ் அரசாங்கத்தின் புதிய கடுமையான நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!
ஹெல்த் பாஸை கடுமையான தடுப்பூசி பாஸாக மாற்றுவது உட்பட பிரான்சின் அரசாங்கத்தின் புதிய கொரோனா நடவடிக்கைகள் மசேதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 3 நாட்களாக நடந்த விவாதத்திற்கு பிறகு வியாழக்கிழமை காலை 5:30 மணிக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் 214 பேர் ஆதராவாகவும், 93 பேர் எதிராகவும் வாக்களித்தனர் மற்றும் 27 வாக்களிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட வேண்டும், இது அடுத்த வார தொடக்கத்தில் செனட்டில் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.
புதிய நடவடிக்கைகளை ஜனவரி 15ம் திகதி முதல் அமுல்படுத்த மக்ரோன் அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தை தொடர்ந்து புதிய நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மசோதாவின் படி, 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் உணவகங்கள் மற்றும் பார்கள், கலாச்சார இடங்கள் நுழைய அல்லது பிராந்திய பொது போக்குவரத்தில் பயணிக்க தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும், தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவு ஏற்றுக்கொள்ளப்படாது.
சுகாதார மையங்கள் மற்றும் சேவைகளை அணுக மட்டும் தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவு ஏற்றுக்கொள்ளப்படும்.