வெளிநாட்டு மருத்துவமனையில் சிக்கிய பிரான்ஸ் நாட்டவர்... குணமடைந்ததும் தூக்கி வர காத்திருக்கும் பொலிசார்: பின்னணி
பிரான்சிலிருந்து தப்பி வெளிநாடு ஒன்றிற்கு ஓட்டம் பிடித்த குற்றவாளி ஒருவர், மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்துள்ள நிலையில், அவர் குணமடைந்ததும் அவரை தூக்கி வருவதற்கு பிரான்ஸ் பொலிசார் காத்திருக்கிறார்கள்.
Mulhouse என்ற பிரெஞ்சு நகரைச் சேர்ந்த பிரெஞ்சு அல்ஜீரியரான Sofiane Hambli (46), மிக அதிக அளவில் பிரான்சுக்கு கஞ்சா இறக்குமதி செய்பவர் என கருதப்படுபவர். அத்துடன் அடிக்கடி சிறையிலிருந்து தப்பியோடிவிடுவது Hambliயின் வழக்கம்.
நான்கு டன் கஞ்சா கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த Hambli, கடந்த மார்ச்சில் ஜாமீனில் வெளிவந்த நிலையில், பிரான்சிலிருந்து தப்பியோடியதால் அவர் மீது சர்வதேச வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அந்த கஞ்சா கடத்தல் மூலம் 2.4 மில்லியன் யூரோக்கள் சம்பாதித்த Hambli, பணம் கொடுத்த ஆளுக்கு கஞ்சாவைக் கொடுக்காததால் அவர் இவரைப் பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், Hambli போலி ஆவணங்களைக் கொடுத்து மொராக்கோ நாட்டிலுள்ள Tangier என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில், 20 சென்றிமீற்றர் நீள வெட்டுக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவரவே பிரான்ஸ் பொலிசார் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.
அவர் குணமடைந்ததும் அவரை பிரான்சுக்கு தூக்கிவந்துவிடுவோம் என்கிறார்கள் பிரான்ஸ் பொலிசார்.