பிரான்ஸ் கடற்படையின் அதிரடி நடவடிக்கை: 10 டன் எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல்
பிரான்ஸ் நாட்டு கடற்படை சுமார் 10 டன் போதைப்பொருளை அதிரடியாக கைப்பற்றியுள்ளது.
10 டன் போதைப்பொருள் பறிமுதல்
மேற்கு ஆப்பிரிக்க நாட்டு கடற்கரை பகுதியில் பிரான்ஸ் நாட்டு கடற்படை வீரர்கள் சுமார் 10 டன் கோகைன்(Cocaine) போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் $610 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையிடம் சிக்கிய மீன்பிடி படகு
சர்வதேச கூட்டாளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை ஆபரேஷன் கோரிம்ப்(Operation Corymbe) என்ற திட்டத்தின் கீழ் கொடி இல்லாத மீன்பிடி படகு ஒன்று இரண்டு பிரான்ஸ் கடற்படை கப்பல்களால் சிறைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்து சுமார் 9.6 டன் எடையுள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அட்லாண்டிக் கடல்சார் மாகாண அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மிகப்பெரிய பறிமுதலுக்கு தேசிய மற்றும் சர்வதேச நாடுகளின் தடையற்ற ஒத்துழைப்பு மட்டுமே காரணம் என்றும் பாராட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |