பிரான்சில் செவிலியர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
பிரான்சில் செவிலியர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஊழியர்கள் தேசிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
கொரோனாவின் போது தங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காததாலும், மேலும் சிறந்த ஊதியம் மற்றும் நிபந்தனைகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
பிரான்சின் தேசிய சிஜிடி தொழிற்சங்கம் குறித்த தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனாவின் போது பிரான்ஸ் மருத்துவமனைகளில் ஏற்பட்ட செவிலியர்கள் மற்றும படுக்கைகளின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, சுகாதார துறையில் முதலீட்டை அதிகாரிக்க தேசிய சிஜிடி தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோடு, உயிர்காக்கும் கவனிப்பு தடை இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஷிப்டு வாரியாக வேலை செய்வோம் என மருத்துவமனை ஊழியர்கள் முன்பு கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.