பிரெக்சிட் மீதான வெறுப்பைக் காட்டும் பிரான்ஸ் அதிகாரிகள்... பாதிக்கப்படும் மீன் வர்த்தகர்கள் புலம்பல்
பிரெக்சிட் மீதான வெறுப்பை பிரான்ஸ் அதிகாரிகள் காட்டுவதால், தங்கள் மீன் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக புலம்புகிறார்கள் பிரான்ஸ் நாட்டு மீன் வர்த்தகர்கள்.
மீன்களின் இலத்தீன் மொழிப்பெயர்களை எழுதும்போது ஏற்படும் எழுத்துப் பிழைகளையும், சுகாதார சான்றிதழ்களில் முத்திரைகள் சரியாக இல்லை என்பதையும் காரணம் காட்டி இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் கடைக்கு வருவதை பிரான்ஸ் அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சால்மன் மற்றும் லாப்ஸ்டர் முதலான மீன்கள் வழக்கமாக 24 மணி நேரத்தில் கடைகளை சென்று சேர்ந்துவிடும் நிலையில், இப்போது இந்த அதிகாரிகள் தாமதம் ஏற்படுத்துவதால், அவை வந்து சேர மூன்று நாட்கள் வரை ஆகிறதாம்.
அப்படி மூன்று நாட்கள் தாமதமாவதால் மீன்கள் கெட்டுப்போவதாகவும், அதனால், வேறு வழியின்றி பிரித்தானியாவிலிருந்து மீன்கள் ஆர்டர் செய்வதையே அவர்கள் ரத்து செய்யத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் பிரான்ஸ் மீன் வர்த்தகர்கள்.