பிரான்சில் அடுத்த 9 மாதங்களுக்கு இது தொடரும்! நாடாளுமன்றம் ஒப்புதல்
கொரோனா ‘ஹெல்த் பாஸ்’ நடவடிக்கைகளை குறைந்தபட்சம் 2022 ஜூலை 31 வரை நீட்டிக்க பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் நடந்த மசோதா மீதான வாக்கெடுப்பில், பெரும்பாலானோர் நடவடிக்கையை நீட்டிக்க ஆதவாக வாக்களித்துள்ளனர்.
குளிர்காலம் நெருங்குவதால் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை ஐரோப்பிய நாடுகள் உறுதிசெய்து வருவதற்கு மத்தியில் பிரான்சிஸ் ஹெல்த் பாஸ் நடவடிக்கையை நீட்டித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக முழுமையாக அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டது அல்லது சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என பரிசோதனை செய்ததை நிரூபிக்கும் சான்றிதழ்களே ‘ஹெல்த் பாஸ்’ ஆகும்.
பிரான்சில் பார்கள், உணவகங்கள் மற்றும் விளையாட்டு மையஙக்ள போன்ற இடங்களில் நுழைய ஹெல்த் பாஸ் கட்டாயமாகும். ஹெல்த் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரான்சில் நாடு தழுவிய அளவில் ஹெல்த் பாஸ்-க்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
எனினும் சமீபத்திய வாரங்களில் ஹெல்த் பாஸ்-க்கு எதிரான போராடுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.