மனைவியை அறைந்த பிரான்ஸ் கட்சித் தலைவருக்கு சிறை
தன் மனைவியை அறைந்ததற்காக பிரான்ஸ் நாட்டு இடதுசாரிக் கட்சித் தலைவர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
விவாகரத்து செய்ய இருக்கும் தம்பதியர்
பிரான்ஸ் நாட்டு இடதுசாரிக் கட்சியான La France Insoumose கட்சியின் ஒருங்கிணைப்பாளரான Adrien Quatennensம் அவரது மனைவியும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதற்கான நடைமுறைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
Lille நகர நீதிமன்றத்தில் ஆஜரான Adrien தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மனைவிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும், வெறுப்பூட்டும் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் மீண்டும் குற்றச்செயல் எதிலாவது ஈடுபட்டாலொழிய, இப்போதைக்கு சிறை செல்லவேண்டியதில்லை. அத்துடன், Adrienக்கு 2,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
oto by Joël SAGET / AFP
நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க எதிர்ப்பு
Adrien கட்சி ஒருங்கிணைப்பாளராக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என கூறப்படுகிறது.
ஆனால், அதற்கும் பெண்ணிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.