புலம்பெயர்தல் தொடர்பில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யும் பிரான்ஸ் கட்சி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவோம் என்றே வெளிப்படையாக பிரச்சாரம் செய்துவருகிறது பிரான்ஸ் கட்சி ஒன்று.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...
Nathan Laine/Bloomberg
நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
இந்நிலையில், National Rally கட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. National Rally கட்சி புலம்பெயர்தலுக்கெதிரான கட்சி என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
Jeremy Suyker/Bloomberg
இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புலம்பெயர்தலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவோம் என பிரச்சாரம் செய்துவருகிறது National Rally கட்சி.
வெளிநாட்டுக் குற்றவாளிகளை நாடுகடத்த இருப்பதுடன், droit du sol என்னும் உரிமையையும் நீக்க இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பிரான்சில் இப்போது நடைமுறையில் இருக்கும் droit du sol என்பது, பிரான்சில் பிறந்தவர்களுக்கு தானாகவே குடியுரிமை கிடைக்க வகை செய்யும் ஒரு உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |