பாண் வாங்கச் சென்ற பிரான்ஸ் பிரதமர்: உருவாகியுள்ள சர்ச்சை
பிரான்ஸ் பிரதமர் பேக்கரி ஒன்றிற்கு பாண் வாங்கச் சென்ற விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பாண் வாங்கச் சென்ற பிரான்ஸ் பிரதமர்
பிரான்ஸ் பிரதமரான செபாஸ்டியன் லெக்கார்னு, பேக்கரி ஒன்றிற்குச் சென்று பாண் வாங்கிய விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காரணம், அவர் உழைப்பாளர் தினமான மே மாதம் 1ஆம் திகதி பேக்கரியில் பாண் வாங்கினாராம்!
அதாவது, பிரான்சைப் பொருத்தவரை, உழைப்பாளர் தினத்தன்று மருத்துவமனைகள், ஹொட்டல்கள் போன்ற அத்தியாவசிய துறைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே வேலை செய்யலாம்.
AFP via Getty Images
அதுவும், அன்று பணியாற்றுபவர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படவேண்டும் என சட்டம் சொல்கிறது.
இதற்கிடையில், மே 1ஆம் திகதி பேக்கரிகள் இயங்கலாம் எனக்கூறும் மசோதா ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேக்கரி ஊழியர்கள், தாங்கள் தாமாக முன்வந்துதான் வேலை செய்வதாக எழுத்தில் தெரிவிக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு இரட்டை ஊதியம் கொடுக்கப்படவேண்டும் என்றும் அந்த மசோதா கூறுகிறது.
அதாவது, பேக்கரிகள் இயங்க அனுமதிக்கவேண்டும் என அரசு கூற, தொழிலாளர் யூனியன்களோ, ஊழியர்கள் பின்னாட்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படக்கூடும் என்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |