பிரான்ஸ் பட்ஜெட் வாக்கெடுப்பு: பிரதமர் தலை தப்பியது
பிரான்சில் பட்ஜெட் தொடர்பான வாக்கெடுப்பில் பிரதமர் தலை தப்பியுள்ளது.
பிரான்ஸ் பட்ஜெட் வாக்கெடுப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்தே பிரான்ஸ் அரசியலில் ஒரு நிலையில்லாத்தன்மை நிலவுகிறது.

அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைய, கடைசியாக செப்டம்பர் மாதம் இரண்டாவது முறையாக செபாஸ்டியன் லெகார்னுவை பிரதமராக தேர்ந்தெடுத்தார் மேக்ரான்.
இந்நிலையில், நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 247 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 234 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஆகவே, நாடாளுமன்றத்தில் கீழவையில் பட்ஜெட் மசோதா நிறைவேறியுள்ளது. அதனால், பிரதமர் செபாஸ்டியனின் பதவி தப்பியுள்ளது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |