பிரான்ஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை: ஆட்கடத்தல்காரர்கள் பலர் கைது
பிரான்ஸ் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் பலனாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆட்கடத்தல்காரர்கள் பலர் கைது
பிரான்ஸ் அதிகாரிகள், யூரோபோல், யூரோஜஸ்ட் மற்றும் பெல்ஜியம் ஃபெடரல் பொலிசாரின் உதவியுடன் பாரீஸை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 16 பேரை கைது செய்துள்ளார்கள்.

இவர்கள், வியட்நாமிலிருந்து ஆட்களை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்து, பின் அங்கிருந்து பிரான்சுக்குக் கொண்டுவருகிறார்கள்.
பின்னர் அந்த மக்கள் சிறுபடகுகள் மற்றும் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைகிறார்கள்.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன், அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து 41 புலம்பெயர்வோரையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதற்கிடையில், பிரான்ஸ் பொலிசார் விடுத்த கைது வாரண்டைத் தொடர்ந்து, இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக காத்திருக்கும் புலம்பெயர்வோர் பிரான்சில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருபவர் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரை பிரித்தானிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில், அவரை பிரான்சுக்கு கொண்டுவரும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |