கருப்பினத்தவரை மோசமான முறையில் தாக்கிய பிரெஞ்சு பொலிசார்: தண்டனை அறிவிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கருப்பினத்தவர் ஒருவரை நிர்வாணமாக்கி, அவரது ஆசனவாயில் லத்தியால் தாக்கிய பிரெஞ்சு பொலிசார் மூவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவியைத் தாக்கிய பொலிசார்
2017ஆம் ஆண்டு, பொலிசார் வழக்கமாக சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த Théo Luhaka (22) என்னும் கருப்பினத்தவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
முன் எந்த குற்றசெயலிலும் ஈடுபட்டிராத தியோவை கீழே தள்ளிய பொலிசார், எட்டு நிமிடங்களுக்கு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்கள்.
Getty images
தியோவை நிர்வாணமாக்கிய பொலிசார், அவரது ஆசனவாயில் லத்தியை சொருகி தாக்கியதில், அவருக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு நிறுத்தாமல், ரத்தம் சொட்டச் சொட்ட அவரை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்ற பொலிசார், அவர் முகத்தில் துப்பி, இனரீதியாக அவரை அவமதித்துள்ளார்கள்.
தியோவை பொலிசார் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாக, பிரான்சே கொந்தளித்தது. பாரீஸ் தெருக்களில் மக்கள் திரண்டு பேரணிகள் நடத்தினார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தியோவை அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த Francois Hollande சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
Getty images
தண்டனை அறிவிப்பு
இந்த வழக்கு இம்மாதம், அதாவது, ஜனவரி 9ஆம் திகதி துவங்கிய நிலையில், தற்போது, தியோவைத் தாக்கிய பொலிசாருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
தியோவைத் தாக்கிய பொலிசாரில் ஒருவருக்கு ஓராண்டு சிறையும், மற்ற இருவருக்கு மூன்று மாதங்கள் சிறையும் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது நபர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
AFP
விடயம் என்னவென்றால், தண்டனை அறிவிக்கப்பட்டாலும், அந்த பொலிசார் இப்போதைக்கு சிறை செல்லவேண்டியதில்லை. அதாவது, அவர்களுக்கு suspended jail sentences என்னும் ரீதியில்தான் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், அவர்களுக்கு சிறைத்தண்டனை என தீர்ப்பளிக்கபட்டாலும், உடனே அவர்கள் சிறை செல்லத் தேவையில்லை. மீண்டும் அவர்கள் ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டால் மட்டுமே அவர்கள் சிறை செல்லவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |