கத்தியுடன் கடலுக்குள் இறங்கும் பிரான்ஸ் பொலிசார்: பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுக்க புதிய நடவடிக்கைகள்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் தரப்பில் புதிய நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
புதிய நடவடிக்கைகள்
முன்பு, சட்டவிரோத புலம்பெயர்வோர் கடற்கரையில் நிற்கும்வரையில் மட்டுமே பிரான்ஸ் பொலிசார் அவர்களைத் தடுப்பதுண்டு.
இப்போது, கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுக்கத் துவங்கியுள்ளார்கள் பிரான்ஸ் பொலிசார்.
அத்துடன், கத்திகளுடன் கடலுக்குள் இறங்கி, புலம்பெயர்வோர் பயணிக்கும் ரப்பர் படகுகளை குத்தி காற்றை இறக்கவும் செய்கிறார்கள் அவர்கள்.
மேலும், தற்போது ஜெட் ஸ்கீ வகை படகுகளில் சென்று புலம்பெயர்வோரை தடுப்பது மற்றும் அவர்களுடைய படகுகளின் புரப்பலர்கள் மீது வலையை வீசி படகை இயங்கவிடாமல் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளையும் பிரான்ஸ் பொலிசார் துவக்கியுள்ளனர்.
பிரான்ஸ் பொலிசாரின் இந்த நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக பிரித்தானிய தரப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |