சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்
French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியானது நினைவிருக்கலாம்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கிறார்களோ என கேள்வி எழுந்துள்ளது.
சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்
இந்நிலையில், புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடும் என்னும் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று, பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட சிறுபடகொன்றில் ஆப்கன் நாட்டவரான 34 வயது புலம்பெயர்வோர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை, சக புலம்பெயர்வோர் தாக்கியிருக்கலாம் என பிரான்ஸ் பொலிசார் கருதுகிறார்கள்.
அத்துடன், அதே படகிலிருந்து காயமடைந்த மூவரையும் பிரான்ஸ் பொலிசார் மீட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், இரண்டு பெண்களுக்கு தீக்காயங்கள் இருந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
ஏற்கனவே, சென்ற மாதம் பிரான்சிலுள்ள கலாயிஸ் நகருக்கருகிலுள்ள கடற்கரை ஒன்றில் புலம்பெயர்வோர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |