பிரான்சில் பொலிஸ் மீது கத்திக்குத்து தாக்குதல்!
பிரான்சில் பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்து Gerald Darmanin ட்விட்டரில் பதிவிட்டதாவது, கேன்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரி, ஒரு ஆசாமியால் கத்தியால் குத்தப்பட்டதில் காயம் அடைந்தார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர் என Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
Un policier du commissariat de #Cannes a été blessé à l’arme blanche. L’agresseur a été neutralisé par ses collègues. Je me rends sur place immédiatement ce matin et j’apporte tout mon soutien à la police nationale et à la ville de Cannes.
— Gérald DARMANIN (@GDarmanin) November 8, 2021
மேலும், காலையில் தான் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி, காவல் நிலையத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை காரின் கதவை திறந்து உள்ளே இருந்த காவலரை கத்தியால் தாக்கினார்.
பின் காரிலிருந்து இரண்டாவது பொலிஸ் அதிகாரியை தாக்க முயன்றுள்ளார், ஆனால் காரிலிருந்த மற்றொரு அதிகாரி துப்பாக்கியை எடுத்து தாக்குதல்தாரியை சுட்டுள்ளார்.
இதில் தாக்குதல்தாரி பலத்த காயமடைந்தததாக காவல்துறை வட்டாரத்தை மேற்கோள்காட்டி BFM TV செய்தி வெளியிட்டுள்ளது.