கைது செய்யப்படும்போது மூச்சுத்திணறி உயிரிழந்த சாரதி: பொலிசார் மீது வழக்கு
பிரான்சில் பொலிசாரின் வன்முறை அதிகரித்துவருவதாக கருதப்படும் நிலையில், சாரதி ஒருவரைக் கைது செய்யும்போது அவர் மூச்சுத்திணறி உயிரிழந்த விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
மூச்சுத்திணறி உயிரிழந்த சாரதி
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 3ஆம் திகதி, உணவு விநியோகிக்கும் பணியிலிருந்த செட்ரிக் (Cédric Chouviat, 42) என்னும் சாரதியை பிரெஞ்சு பொலிசார் கைது செய்தனர்.
ஹெல்மெட் அணிந்திருந்த செட்ரிக்கை தரையுடன் வைத்து அவர்கள் அழுத்த, அவர் எனக்கு மூச்சுத்திணறுகிறது என கதறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, சுயநினைவிழந்து கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செட்ரிக், ஜனவரி மாதம் 5ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
பொலிசார் மீது வழக்கு
அந்த வழக்கில், செட்ரிக்கை கைது செய்த பொலிசார் மூன்று பேர் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.
அவர்களுடன் நின்ற ஒரு பெண் பொலிசார் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் கழுத்தில் பொலிசார் காலை வைத்து அழுத்தியதால் அவர் உயிரிழந்த வழக்கை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதால், பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |