பிரான்ஸில் வெடித்த போராட்டம்: கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய பொலிஸார்
French police use tear gas to disperse protesters: பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை குண்டுகளை பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய பொலிஸார்
சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பல இடங்களில் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை குண்டுகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தினர்.
நாண்டஸ் நகரில் அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாக்கப்பட்ட எல்லைக்குள் நுழைய முயன்றதை அடுத்து அவர்களை கட்டுப்படுத்த காவலர்கள் கண்ணீர்ப்புகையையும், தண்ணீர் தாரை குண்டுகளையும் காவலர் பிரயோகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றுமாறு லூயர் அட்லாண்டிக் மற்றும் பெயிஸ் டி லா லூயர் பிராந்திய மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைப்போல லியான் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கட்டுப்படுத்தவும் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
தலைநகர் பாரிஸிலும் சனிக்கிழமை போராட்டங்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை மதிய நிலவரப்படி நாடு நடந்த போராட்டங்களில் சுமார் 35,000 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 60,000 பேர் என்ற எண்ணிக்கையை விட மிகவும் குறைவானது ஆகும்.