பிரான்ஸ் துறைமுக தானிய கிடங்கில் பாரிய தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் குவிப்பு
பிரான்சில் La Rochelle துறைமுக தானிய கிடங்குகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு தானிய கிடங்குகளில்
குறித்த தீ விபத்தால் தானியங்களுக்கு எந்த சேதமும் இல்லை எனவும், நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் La Rochelle துறைமுகத்தில் நான்கு தானிய கிடங்குகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
@afp
சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி, நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பெருமளவு தானிய உற்பத்தியை முன்னெடுக்கும் நாடு பிரான்ஸ். மட்டுமின்றி, தீ விபத்து ஏற்பட்ட La Rochelle துறைமுகமானது நாட்டின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி தளமாகவும் அறியப்படுகிறது.
Credit: Police municipale
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |