புதிய பிரதமர் பெயரை அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி: யார் அவர்?
பிரான்சுக்கான புதிய பிரதமர் பெயரை அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த நபர் குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.
பிரான்சின் புதிய பிரதமர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சுக்கான பிரதமர் பெயரை அறிவித்துள்ளார்.
Democratic Movement கட்சியைச் சேர்ந்தவரான François Bayrou (73) என்பவர்தான் பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசியலில் மிகவும் பிரபலமானவரான François, மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.
மேயராகவும், நீதித்துறை அமைச்சராகவும், தேசிய கல்வி அமைச்சராகவும், ஐரோப்பிய நாடாளுமன்ன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகள் வகித்துவந்துள்ள François, ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
1971ஆண்டு Élisabeth Perlant எனும் பெண்ணை மணந்த Françoisக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |