பிரித்தானியா மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் மீது பிரான்ஸ் ஜனாதிபதி விமர்சனம்!
பிரித்தானிய நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பிரித்தானிய-ஸ்வீடிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு "மிகக் குறைந்த தகவல்கள்" மட்டுமே உள்ளன என்று ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
இதனால், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை-பயனற்றது என்று நினைப்பதாகவும், 60 வயதுக்கு கீழ் இருப்பபவர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படலாமா என்பது குறித்து சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், "60 முதல் 65 வயதுடையவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்து குறித்த எங்களது ஆரம்ப முடிவுகள் ஊக்கமளிக்கவில்லை" என்றும் தங்களிடம் எந்த தரவும் இல்லை என்றும், பரிசோத்தித்து பார்க்க எங்களுக்கு சொந்தமாக ஒரு அறிவியல் குழு இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் பிரித்தானியா அதன் இரண்டாவது டோஸை வழங்குவதற்கான இடைவெளியை 12 வாரங்களாக தாமதப்படுத்தியது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானியாவிடம் அனைத்து சுகாதார நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் இருக்கும்போது, இரண்டு டோஸ்களுக்கும் இடையில் அதிகபட்சம் 28 நாட்கள் போதும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.