பிரித்தானியாவுக்கு எதிராக.... ஜேர்மனி சேன்ஸலர் மெர்க்கலுக்கு ஆதவாக களமிறங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்!
பிரித்தானியா பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை விதிக்குமாறு ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அழைப்பு விடுத்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அதை வழிமொழிந்துள்ளார்.
டெல்டா மாறுபாட்டின் பரவலை குறைக்க அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரித்தானியா பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை அமுல்படுத்த வேண்டும் என்று ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் அழைப்பு விடுத்தார்.
ஜேர்மன் சேன்ஸலரின் கருத்துக்களை விமர்சித்த பிரித்தானியா சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice, இவ்வாறு அழைப்பு விடுப்பது நியாயமற்றது என கூறினார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளை அனுமதிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டைப் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு எல்லைகளைத் திறப்பதிலும், தடுப்பூசிகளை அங்கீகரிப்பதிலும் ஒருங்கிணைந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.