இந்திய மக்களுக்கு பிரான்ஸ் அதிபர் அனுப்பிய செய்தி!
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் இந்திய மக்களுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இதுகுறித்து கூறியதாவது "COVID-19 வழக்குகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்திய மக்களுக்கு எனது தோழமை செய்தியை அனுப்ப விரும்புகிறேன்.
யாரையும் விடாத இந்த போராட்டத்தில் பிரான்ஸ் உங்களுடன் உள்ளது. எங்கள் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்❞ என்று கூறியுள்ளார்.
இதனை அவரது செய்தித் தொடர்பாளர் இம்மானுவேல் லெனைன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
❝I want to send a message of solidarity to the Indian people, facing a resurgence of COVID-19 cases. France is with you in this struggle, which spares no-one. We stand ready to provide our support.❞
— Emmanuel Lenain (@FranceinIndia) April 23, 2021
— President Emmanuel Macron
பிரான்ஸ் அரசு கடந்த புதன்கிழமை கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவுக்கு தாற்காலிக போக்குவரத்து தடை விதித்தது.
இருப்பினும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமாக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,32,730 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை 1,62,63,695-ஆக உயர்ந்துள்ளது. அதே போல், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருவோரின் எண்ணிக்கை 1.62 கோடியாக அதிகரித்துள்ளது.