மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா?
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாடாளுமன்றத்தைக் கலைத்து திடீர் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார். ஆனால், அவரது இந்த முடிவு அவருக்கே ஆபத்தாக முடியலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
தேர்தல் நடத்த முடிவு செய்துள்ள மேக்ரான்
நடந்து முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில், இமானுவல் மேக்ரானின் Renaissance கட்சி கடும் தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் நாடாளுமன்றத்தின் கீழவைக்கு தேர்தல் அறிவித்துள்ளார். ஜூன் மாதம் 30 ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆகிய நாட்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
Pic: Reuters
மேக்ரானுக்கே தொல்லையாக முடியுமா?
ஆனால், மேக்ரான் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ள விடயம் அவருக்கே தொல்லையாக முடியலாம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
Pic: Reuters
அதாவது, தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Rassemblement National (RN) வெற்றி பெறுமானால், பிரான்ஸ் பிரதமர் பதவியை, மேக்ரான் அக்கட்சிக்கு தாரைவார்க்க வேண்டியிருக்கும்.
அதாவது, Rassemblement National (RN) கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான Marine Le Pen, அல்லது அவரது கட்சியில், தற்போதைய பிரதமரான கேபிரியல் அட்டாலுக்கு சமமாக கருதப்படும், அவரது போட்டியாளரான Jordan Bardella என்பவருக்கு, மேக்ரான் பிரதமர் பதவி அளிக்கவேண்டி வரலாம் என்கிறார் அரசியல் வல்லுநரும், 20 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருபவருமான Richard Corbett என்பவர்.
Pic: Reuters
ஆக, மேக்ரான் அவசரப்பட்டு தேர்தல் அறிவித்துவிட்டார். முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |