போர் ரஷ்யாவுடனோ ரஷ்ய மக்களுடனோ அல்ல... புடினுடன் மட்டும்தான்: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வலியுறுத்தல்
உலகம் ரஷ்யாவுடனோ அல்லது ரஷ்ய மக்களுடனோ போர் செய்யவில்லை என்றும், போர், புடினுடன் மட்டும்தான் என்றும் கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய மேக்ரான், உக்ரைனில் நேட்டோ படைகள் இல்லை என்றும், ரஷ்யா தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
உலகம் அறிந்த வண்ணமாக ரஷ்யாவிலும் பல்வேறு நாடுகளிலும் வாழும் ரஷ்யர்களே போரை எதிர்த்து பேரணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சரணடையும் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் அன்புடன் வரவேற்று உணவளிப்பதைக் குறித்த செய்திகளும் வெளியானவண்ணம் உள்ளன.
இந்நிலையில், ரொமேனியாவுக்கு நூற்றுக்கணக்கான பிரெஞ்சு போர் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார் மேக்ரான்.
இப்படிப்பட்ட சூழலில்தான், நாங்கள் ரஷ்யாவுடன் போர் செய்யவில்லை, ரஷ்ய மக்களுடனும் போர் செய்யவில்லை, எங்கள் போர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மட்டும்தான் என்று கூறியுள்ளார் அவர்.
உக்ரைனுடன் போரைத் தவிர்ப்பதற்காக, பலமுறை அவர் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.