தேர்தலில் தோற்றாலும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பதவி விலகமாட்டார்: காரணம் இதுதான்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த தேர்தலில் அவரது கட்சி தோற்றாலும் அவர் பதவி விலக மாட்டாராம்!
பதவி விலகமாட்டேன்
நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தனது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், தான் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று கூறினார்.
தான் பதவி விலகுவதாக கூறுவதே அபத்தம் என்று கூறிய மேக்ரான், அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய தான் விரும்புவதாக தெரிவித்தார்.
காரணம் இதுதான்
அதாவது, பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2027இல்தான் நடைபெற உள்ளது. இப்போதைய தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, பிரதமர் பதவியைத்தான் பிடிக்குமேயொழிய ஜனாதிபதி பதவியில் எந்த மாற்றமும் ஏற்படாது.
ஆக, மக்களின் மன நிலைமையை அறிந்துகொள்வதற்காகவே இப்போது மேக்ரான் திடீர் தேர்தல் அறிவித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே நடந்து முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் மேக்ரான் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அந்த தோல்வியும், இப்போது நடைபெற உள்ள தேர்தல்களில் தனது கட்சியின் நிலையையும் அறிந்துகொள்வதற்காகவே மேக்ரான் தேர்தல் அறிவித்துள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
சொல்லப்போனால், இந்த தேர்தலில் Marine Le Penஇன் National Rally கட்சி வெற்றி பெற்றால் கூட, அவர்களுடைய தலைமைத்துவத்தைக் கண்டு மக்கள் ஏமாற்றமடைவார்கள், அது 2027 இல் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தனக்கு சாதகமாக அமையும் என மேக்ரான் கருதுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |