பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ரஷ்யா கோபம்
உக்ரைன் படைகளை மீறி, ரஷ்யா நாட்டுக்குள் நுழையும் பட்சத்தில், உக்ரைன் உதவி கோருமானால், உக்ரைனுக்கு பிரெஞ்சுப் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
ரஷ்யா கோபம்
நேற்று முன்தினம் ஊடகம் ஒண்றிற்கு அளித்த பேட்டியில், உக்ரைனுக்கு பிரெஞ்சுப் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மேக்ரான் கூறிய விடயம் ரஷ்ய தரப்பை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
LUDOVIC MARIN/POOL/AFP/GETTY
மேக்ரானின் அறிக்கை மிகவும் முக்கியமானதும் மிகவும் ஆபத்தானதும் ஆகும் என்று கூறியுள்ள கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov, மேக்ரான் தொடர்ந்து ரஷ்ய உக்ரைன் போரில் நேரடியாக தலையிடும் வகையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று மாஸ்கோவில் இது குறித்து பேசிய அவர், இது மிகவும் அபாயமான போக்கு என்று கூறியுள்ளார்.
CBS/INSTITUTE OF WAR
உக்ரைனுக்கு தன் நாட்டுப்படைகளை அனுப்புவது தொடர்பில் மேக்ரான் தெரிவித்திருந்த கருத்துக்கள் ரஷ்ய தரப்பிலிருந்தும் நேட்டோ தரப்பிலும் விமர்சனங்கள் எழக் காரணமாக அமைந்தன.
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறுமானால், நமக்கு ஐரோப்பாவில் பாதுகாப்பே இருக்காது, ரஷ்யா உக்ரைனுடன் மோதுவதுடன் நின்றுவிடும் என்பதற்கு என்ன நிச்சயம் என்று கேள்வி எழுப்பியிருந்தார் மேக்ரான்.
மேக்ரானின் கருத்துக்கள் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன என்று கூறியுள்ள Peskov, அவை, தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவை ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |