ரஷ்யாவை அவமதிக்கக்கூடாது... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் எச்சரிக்கை
உக்ரைன் போருக்காக ரஷ்யாவை அவமதிக்கக்கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
அதாவது, ஒரு சமாதான ஒப்பந்தம் உருவாகுவதாக ஒப்புக்கொள்ளப்படும் நிலையில், அந்த நேரத்தில், உக்ரைனை ஊடுருவியதைக் காரணம் காட்டி ரஷ்யாவை அவமதிக்கக்கூடாது என்பது அவரது கருத்து.
போர் முடிந்ததும் ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியிருக்கும் என்றும், அப்போது ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைக் காரணம் காட்டி அந்நாட்டை அவமதித்து மேலும் பதற்றத்தை உருவாக்குவதால் நிலைமை மோசமாகுமே ஒழிய, அதனால் பலன் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாளை நாம் சமாதானத்தை உருவாக்கவேண்டியிருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று கூறும் மேக்ரான், அதை பேச்சுவார்த்தை மூலம்தான் நிறைவேற்றவேண்டியிருக்கும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். கடைசியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டியது உக்ரைனும் ரஷ்யாவும்தான். அப்போது ரஷ்யாவை அவமதிப்பது நன்றாக இருக்காது என்கிறார்.