பிரபல பாட்காஸ்டர் கேண்டஸ் ஓவன்ஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரெஞ்சு ஜனாதிபதி
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது மனைவி பிரிஜிட்டும், வலதுசாரி பாட்காஸ்டர் கேண்டஸ் ஓவன்ஸுக்கு எதிராக அமெரிக்காவில் 22 பிரிவுகளில் அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
ஒரு ஆணாக இருக்கலாம்
ஜனாதிபதி மேக்ரானின் மனைவி ஒரு ஆணாக இருக்கலாம் என்ற கருத்தை தமது பாட்காஸ்டில் கேண்டஸ் ஓவன்ஸ் விவாதித்துள்ளார். டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கில், மேக்ரான் தம்பதிக்கு எதிராக ஓவன்ஸ் ஒரு வருட காலமாக இடைவிடாத அவதூறு பிரச்சாரத்தை ஒளிபரப்பியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் தமது பாட்காஸ்டில் பிரான்சின் முதல் பெண்மணி ஒரு ஆணா என்ற கருத்தை ஓவன்ஸ் விவாதப்பொருளாக்கியுள்ளார். அத்துடன், அந்த காணொளியை அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பரவலாக விளம்பரம் செய்துள்ளார்.
அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய முறைகேடு என்றும் அதை அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போதிருந்து, ஓவன்ஸ் தனது கிட்டத்தட்ட 4.5 மில்லியன் யூடியூப் சந்தாதாரர்களுக்காக பிரிஜிட் மேக்ரானைப் பற்றிய ஏராளமான காணொளிகளை தயாரித்துள்ளார்.
தண்டனை இழப்பீடு
அமெரிக்க ஊடகங்கள் மத்தில் இப்படியான ஒரு அவதூறை முதலில் பரப்பியவர் ஓவன்ஸ் என்றே மேக்ரான் தரப்பு தங்கள் புகார் மனுவில் பதிவு செய்துள்ளது.
மேக்ரான் தம்பதியி தற்போது தண்டனை இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதுடன், எதிர்கால வணிக வாய்ப்புகளை இழப்பது உட்பட கணிசமான பொருளாதார சேதங்களை சந்தித்ததாகவும் முறையிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |