உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்கா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.
மறுபக்கம், ஐரோப்பிய தலைவர்கள் சிலரும் அதே நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்கள்.
அமெரிக்கா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி
ஆக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இரண்டு வெவ்வேறு அணிகள் உருவாகியுள்ளது போன்ற தோற்றம் காணப்படுகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் உக்ரைன் போர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளுக்கக அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.
இந்த தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வால்ட்ஸ், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பல தரப்பினரிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறோம் என்று கூறியதுடன், அடுத்த கட்டமான கூடுதல் விவரங்கள் குறித்து பேச குழுக்கள் அமைக்க இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |