பிரான்ஸ் குடிமக்கள் மீது கைவைத்தால்... நாடொன்றிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
பிரெஞ்சு குடிமக்கள் அல்லது அவர்கள் தொடர்பிலான விடயங்கள் மீது கைவைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு
சமீபத்தில் நைஜர் ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoumஇன் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, இராணுவ ஜெனரலான Abdourahamane Tchiani தன்னை நைஜரின் ஆட்சியாளராக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு வழங்கிவந்த நிதியுதவியை பிரான்ஸ் நிறுத்தியது. ஆகவே, கோபமடைந்த போராட்டக்காரர்கள் நைஜரிலுள்ள பிரெஞ்சு தூதரகம் முன் கூடி கோஷங்கள் எழுப்பினர், புடின் வாழ்க என்றும், பிரான்ஸ் ஒழிக என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பிரான்ஸ் எச்சரிக்கை
அதைத் தொடர்ந்து, பிரெஞ்சு குடிமக்கள் அல்லது அவர்கள் தொடர்பிலான விடயங்கள் மீது கைவைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் மக்கள் மற்றும் பிரான்ஸ் தொடர்பான எந்த விடயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை சகித்துக்கொள்ளமாட்டார் என்றும், பிரான்ஸ் தூதரக அலுவலர்கள், இராணுவத்தினர் மற்றும் பிரான்ஸ் தொழிலகங்கள் ஏதாவது தாக்குதலுக்குள்ளானால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |