பிரான்ஸ் போராட்டங்கள்: பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ள பிரான்ஸ் பிரதமர்
பிரான்சில் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்தும் மேக்ரானின் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என மக்கள் சாலைகளில் குவிய, சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் பிரதமர்
இந்நிலையிலில், பிரான்ஸ் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் யூனியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார் பிரான்ஸ் பிரதமரான எலிசபெத் (Elisabeth Borne).
அடுத்த திங்கட்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி பேச்சுவார்த்தைகளைத் துவக்க திட்டமிட்டுள்ளார் அவர்.
aljazeera
பேச்சுவார்த்தையில் இடம்பெறும் விடயங்கள்
பேச்சுவார்த்தையில் இடம்பெறப்போகும் விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேளிவிக்கு பதிலளித்த எலிசபெத், இரண்டு விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.
ஒன்று, நாட்டில் அமைதியைக் கொண்டுவருதல், இரண்டு, பிரான்ஸ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுத்தல் ஆகிய விடயங்களுக்கே பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக தெரிவித்தார் அவர்.