பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா: மேக்ரான் விடுத்துள்ள கோரிக்கை
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரதமர் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.
மேக்ரான் விடுத்துள்ள கோரிக்கை
பிரான்சில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளன. மேக்ரானின் கட்சி இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது.
ஆகவே, பிரதமராக பதவி வகித்து வந்த, மேக்ரான் கட்சியைச் சேர்ந்தவரான கேப்ரியல் அட்டால் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அடுத்த பிரதமர் தேர்தெடுக்கப்படும் வரை காபந்து பிரதமராக நீடிக்குமாறு கேப்ரியலைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விடயம் என்னவென்றால், அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் இடதுசாரிக் கூட்டணிக்குள் கருத்துவேற்பாடுகளும், உரசல்களும் உருவாகியுள்ளன. அக்கட்சியால் இதுவரை பிரதமர் வேட்பாளர் என ஒருவரை முன்னிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |