பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுதலை

France
By Balamanuvelan Nov 11, 2025 06:31 AM GMT
Report

ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி, மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்! 

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுதலை | French Sarkozy Released From Prison After 3 Weeks

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் சார்க்கோஸி

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது. 

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுதலை | French Sarkozy Released From Prison After 3 Weeks

சார்க்கோஸி வழக்கில், அவர் மீதான, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என முடிவு செய்த நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 21ஆம் திகதி அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

சார்க்கோஸி சிறையிலடைக்கப்பட்டதுமே, அவரது சட்டத்தரணிகள் அவரை சீக்கிரமாக விடுதலை செய்யக்கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

அத்துடன், சார்க்கோஸிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேல்முறையீடும் செய்துள்ளனர்.

இந்நிலையில், சார்க்கோஸியை சீக்கிரமாக விடுதலை செய்யக்கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவித்துள்ளது. 

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுதலை | French Sarkozy Released From Prison After 3 Weeks

அவரது மேல்முறையீட்டு வழக்கு அடுத்த ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், சார்க்கோஸி, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருப்பார். அத்துடன், அவர் பிரான்சை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், தனது சமூக ஊடகப் பக்கத்தில், ‘இனி என்னை நிரபராதி என நிரூபிப்பதில் மட்டுமே எனது முழு கவனமும் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார் சார்க்கோஸி.

மேலும், ’வாய்மையே வெல்லும், கதையின் முடிவு இனிதான் எழுதப்பட உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுதலை | French Sarkozy Released From Prison After 3 Weeks

சார்க்கோஸி, அக்டோபர் மாதம் 21ஆம் திகதி சிறையிலடைக்கப்படுவதற்காக புறப்பட்டது போலவே, இப்போது அவர் சிறையிலிருந்து புறப்படும் காட்சிகளும், தன் வீட்டை வந்தடையும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US