இனி மாணவ மாணவிகளை வம்புக்கிழுத்தால்... பிரான்ஸ் அதிரடி அரசாணை
உலக நாடுகள் பலவற்றில், சக மாணவர்களை வம்புக்கிழுக்கும் ஒரு விடயம் இருந்துகொண்டே இருக்கிறது.
இனி அப்படி சக மாணவ மாணவியர்களை வம்புக்கிழுப்பவர்களுக்காக புதிய அரசாணையே பிரான்சில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சக மாணவர்களை வம்புக்கிழுக்கும் பிரச்சினை
உலகம் முழுவதும், 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட 130 மில்லியன் மாணவ மாணவியர், அதாவது, மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர், வம்புக்கிழுக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக (bullying) Atlasocio இணையதளம் கூறுகிறது.
மாணவ மாணவியர் பலர், இப்படி துன்புறுத்தப்படுவதாக வீட்டிலும் சொல்ல இயலாமல், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
பிரான்சில் புதிய அரசாணை
இந்நிலையில், வம்புக்கிழுத்தலுக்கெதிராக பிரான்சில் புதிய அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், வம்புக்கிழுக்கப்படும் மாணவர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவதுண்டு.
ஆனால், அது அவர்களுக்கு இரட்டை தண்டனை விதிப்பது போலாகும் என வம்புக்கிழுத்தலுக்க்கெதிரான பிரச்சாரக் குழுக்கள் கூறியிருந்தன. அதாவது, ஒரு பிள்ளை, தான் வம்புக்கிழுக்கப்படுவதால் வேறொரு பள்ளிக்கு மாற்றப்படுவதுடன்,
சில நேரங்களில் பிள்ளைகளுக்காக பெற்றோரும் பணியிட மாற்றம் பெற்றுக்கொண்டு வேறிடத்துக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ஆக, பிள்ளை வம்புக்கிழுக்கப்படுவதுடன், பெற்றோருக்கும் தண்டனை போலாகிவிட்டது, பாதிக்கப்படும் பிள்ளைகள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படும் விடயம்.
ஆகவே, பிரான்ஸ் கல்வி அமைச்சரான Gabriel Attal, புதிய அரசாணை ஒன்றைக் கொண்டுவந்துள்ளார்.
அதன்படி, இனி வம்புக்கிழுத்தலால் பாதிக்கப்படும் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யாமல், வம்புக்கிழுக்கும் மாணவர்களையே வேறு பள்ளிகளுக்கு மாற்ற அந்த அரசாணை வழிவகை செய்கிறது.
ஆக, தாங்கள் திடீரென பணி மாற்றம் பெறும் நிலை உருவாகலாம் என்பதால், வம்பிழுக்கும் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அவர்களைப் பெற்ற பெற்றோர் தலையில் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |