பிரான்ஸ் போராட்டங்கள்... கலவரக்காரர்களை பொறுப்பேற்கவைக்கும் மசோதா நிறைவேற்றம்
French Senate backs 'make rioters pay' bill despite rights concerns: பிரான்ஸ் போராட்டங்களின்போது சேதம் ஏற்படுத்திய கலவரக்காரர்களை சேதத்துக்குப் பொறுப்பேற்கவைக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஆதரவு.
வன்முறைப் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கலவரக்காரர்கள் தாங்கள் ஏற்படுத்திய சேதத்துக்காக பணம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் ஒரு மசோதா பிரான்ஸ் அரசால் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் ஆதரவு
மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்கள் என பிரான்ஸ் கலவர பூமியாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல இடங்களில் வன்முறை வெடித்தது, பொதுச்சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, கலவரக்காரர்கள் தாங்கள் ஏற்படுத்திய சேதத்துக்கு பொறுப்பேற்கும் வகையில் மசோதா ஒன்று முன்வைக்கப்பட்டது.
அந்த மசோதா, நேற்று புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தது. நாடாளுமன்றம், வன்முறைப் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கலவரக்காரர்கள் தாங்கள் ஏற்படுத்திய சேதத்துக்காக பணம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பான அந்த மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது.
மசோதாவுக்கு ஆதரவாக 229 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 105 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த மசோதா சட்டமாகும் பட்சத்தில், கலவரக்காரர்கள் தாங்கள் ஏற்படுத்திய சேதத்துக்காக 10,000 யூரோக்கள் வரை அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்!