தைவானை ‘நாடு’ என அழைத்து சீனாவை சீண்டிய பிரான்ஸ் செனட்டர்!
சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவான் சென்ற பிரான்ஸ் செனட்டர் அலைன் ரிச்சர்ட், தைவானை ‘நாடு’ என அழைத்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.
தைவானை உலக அரங்கில் தனிமைப்படுத்தி வைக்க முயலும் சீனா, தைவான் என்ற பெயரைப் பயன்படுத்தவோ அல்லது அதை ஒரு நாடு என குறிப்பிடவோ அனுமதிப்பதில்லை.
2016 தைவான் ஜனாதிபதி தேர்தலில் Tsai Ing-wen வெற்றிக்குப் பிறகு அவரது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை சீன அதிகரித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் வெளிநாட்டு அரசியல்வாதிகளின் தைவான் வருகையை தடுக்க சீன தீவிரமாக முயன்று வருகிறது.
இந்நிலையில், பாரிஸில் உள்ள சீன தூதரகம் தொடர்ந்து எச்சரித்த போதிலும் புதன்கிழமை 5 நாள் பயணமாக பிரான்ஸ் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், செனட்டருமான அலைன் ரிச்சார்ட் தைவானுக்கு வருகை தந்துள்ளார்.
தைவானுக்கு வருகை தந்த அலைன் ரிச்சார்டுக்கு, ஜனாதிபதி Tsai Ing-wen உயரிய பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
இதன் பின் பேசிய அலைன் ரிச்சார்ட், பாரிஸில் உள்ள தைவானின் de facto தூதரகம் ‘உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.
அலைன் ரிச்சாரட் தைவானை ‘நாடு’ என குறிப்பிட்டு பேசியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.
அலைன் ரிச்சார்டின் தைவான் பயணம், சீன-பிரான்ஸ் உறவு, பிரான்சின் நற்பெயர் மற்றும் சீனாவின் நலன்களை சேதப்படுத்தும் என்று பாரிசில் உள்ள சீன தூதரகம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.