மாணவியை மோசமாக நடத்திய ஆசிரியை: ஆசிரியைக்கு சிறைத்தண்டனை
பிரான்சில் ஆசிரியை ஒருவர் மாணவி ஒருவரை மோசமாக நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், அந்த மாணவி தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
மாணவியை மோசமாக நடத்திய ஆசிரியை
பிரான்சுக்கு தெற்கே உள்ள Val-d'Oise என்னுமிடத்தில், Evaelle (11) என்னும் மாணவியை Mrs B (63) என ஊடகங்களால் அழைக்கப்படும் ஆசிரியை ஒருவர் தொடர்ந்து மோசமாக நடத்திவந்துள்ளார்.

அவர் எப்போது Evaelleஐயே டார்கெட் செய்து அவரைப் பார்த்து கத்திக்கொண்டே இருப்பார் என Evaelleஇன் சக மாணவிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு Evaelle தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டாள்.
Evaelleஐ துன்புறுத்தி அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த அந்த ஆசிரியைக்கு தற்போது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் மீண்டும் ஏதாவது தவறிழைத்தால் மட்டுமே சிறையில் அடைக்கப்படுவார்.
அத்துடன், அவர் இனி ஆசிரியையாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை Evaelleஇன் பெற்றோர் வரவேற்றுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |