கஷ்டப்பட்டு உருவாக்கிய புலம்பெயர்தல் ஒப்பந்தத்தை ஒரே வார்த்தையில் குலைத்துப்போட்ட பிரித்தானியாவின் புதிய பிரதமர்...

Emmanuel Macron France
By Balamanuvelan Sep 28, 2022 06:52 AM GMT
Report

சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக போரிஸ் ஜான்சன் அரசு நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒப்பந்ததைக் கிடப்பில் போட்டுவிட்டது பிரான்ஸ்.

அதற்குக் காரணம் பிரித்தானியாவின் புதிய பிரதமரின் பொறுப்பற்ற பேச்சு.

பிரித்தானியாவுக்கான பிரதமர் போட்டியில் சரசரவென முன்னேறி வந்தார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்.

கடைசியில், அவரது தோலின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

லிஸ் ட்ரஸ்ஸின் கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை அலட்சியம் செய்து, லிஸ் ட்ரஸ்ஸை பிரதமராக்கினார்கள் அவரது கட்சியினர்.

கஷ்டப்பட்டு உருவாக்கிய புலம்பெயர்தல் ஒப்பந்தத்தை ஒரே வார்த்தையில் குலைத்துப்போட்ட பிரித்தானியாவின் புதிய பிரதமர்... | French Sink Migrant Deal In A Fit Of Pique

ஆனால், ரிஷி எச்சரித்ததுபோலவே, 10 ஆண்டுகளில் இல்லாதவகையில், பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இப்போது, தவறு செய்துவிட்டோம், ரிஷிதான் பிரதமர் பதவிக்கான சரியான ஆள், ஆனால், அவரது தோலின் நிறம் காரணமாக அவர் தோற்கடிக்கப்பட்டுவிட்டார் என்கிறார்கள் மக்கள்.

ஆக மொத்தத்தில், பிரித்தானியாவின் புதிய பிரதமர் எடுத்து வைத்த முதல் அடியே சறுக்கலாகியிருக்கிறது, அவருக்கு மட்டும் அல்ல, மொத்த பிரித்தானியாவுக்கும்!

இதற்கிடையில், தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, தேவையில்லாமல் வாயை விட்டு பிரான்சுடனான உறவையும் கெடுத்துக்கொண்டுள்ளார் லிஸ் ட்ரஸ்.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும், உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலும் நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு சட்ட விரோத அகதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்கள்.

ஆனால், அதை ஒரே வார்த்தையில் குலைத்துவிட்டார் லிஸ் ட்ரஸ்.

ஆம், பிரித்தானியாவில் பிரதருக்கான போட்டி மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி, நண்பரா எதிரியா என்ற கேள்வி லிஸ் ட்ரஸ்ஸிடம் கேட்கப்பட்டது.

கஷ்டப்பட்டு உருவாக்கிய புலம்பெயர்தல் ஒப்பந்தத்தை ஒரே வார்த்தையில் குலைத்துப்போட்ட பிரித்தானியாவின் புதிய பிரதமர்... | French Sink Migrant Deal In A Fit Of Pique

அப்போது, மேக்ரான் நண்பரா அல்லது எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று பதிலளித்திருந்தார் லிஸ் ட்ரஸ்.

அந்த வார்த்தை பிரான்ஸ் தரப்பில் பெரும் எரிச்சலையூட்டியது. இந்தப் பெண் லிஸ் ட்ரஸ் தன்னை யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள், இப்படி பேசியதற்கு அவள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றே ஒருவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், மேக்ரான் குறித்த லிஸ் ட்ரஸ்ஸின் விமர்சனம் இப்போது வேலையைக் காட்டத்துவங்கியுள்ளது.

ஆம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவுடன் செய்ய இருந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டது பிரான்ஸ்.

பிரான்சுடனான ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஏற்கனவே பொருளாதாரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறைச் செயலருக்கும் மற்றொரு புதிய சவால் தயாராகியுள்ளது, சட்ட விரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுதான் அது!  

கஷ்டப்பட்டு உருவாக்கிய புலம்பெயர்தல் ஒப்பந்தத்தை ஒரே வார்த்தையில் குலைத்துப்போட்ட பிரித்தானியாவின் புதிய பிரதமர்... | French Sink Migrant Deal In A Fit Of Pique

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US