பிரான்ஸ் : ஈபில் கோபுரத்திலிருந்து கயிற்றில் நடந்த ஸ்லாக்லைனிங் சாகசக் கலைஞர்!
பிரான்ஸின் ஈபில் (Eiffel) கோபுரத்திலிருந்து 600 மீட்டர் தூரம் கயிற்றில் கடந்த வீரரின் சாகசம் மக்களைக் கவர்ந்துள்ளது.
பல நூறு அடி உயரமான இரண்டு கட்டிடம் அல்லது முனையில் கட்டப்பட்ட ஒரு உறுதியான கம்பியில் எந்த பிடிப்பும் இன்றி தனியாக சமநிலையில் நடந்து அல்லது ஓடி கடக்கும் சாகச விளையாட்டு ஸ்கைலைனிங் (Slacklining) ஆகும். அந்த சாகசத்தை நிகழ்த்தும் கலைஞர் ஸ்லாக்லைனர் என்று அழைக்கப்படுவர்.
பிரான்ஸை சேந்த நேதன் பவுலின் (Nathan Paulin) எனும் 27 அவரது ஸ்லாக்லைனிங் சாகச கலைஞர், சனிக்கிழமையன்று 700 மீட்டர் உயரத்தில், கயிற்றில் நடந்தது மட்டுமல்ல, பல்வேறு சாகசங்களும் புரிந்தார்.
© AFP 2021 / SAMEER AL-DOUMY
ஈபில் கோபுரத்திலிருந்து, Seine ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள Chaillot Theatre கலை அரங்கக் கட்டடத்திற்கு அவர் கயிற்றில் நடந்து சென்றார். பிரான்ஸ் தேசிய மரபுடைமை நாளையொட்டி அந்தச் சாகசத்தில் அவர் ஈடுபட்டார்.
4 ஆண்டுப் பயிற்சிக்கு பிறகே வெற்றிகரமாக சாகசம் செய்யமுடிந்ததாக நேதன் பவுலின் சொன்னார்.
முன்னதாக, 2019-ஆம் ஆண்டில், நேதன் பவுலின் 150 மீட்டர் உயரம், 510 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு நடைபாதை கட்டிடங்களுக்கு இடையே இந்த ஸ்லாக்லைனிங் சாகசத்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Un homme, 670m de traversée sur une sangle de 2,5cm de large à 70m de hauteur.... RDV aujourd'hui à 16h15 et demain à 15h pour encourager @NathanPaulinFil et suivre cette incroyable performance (sous réserve de conditions météo favorables)
— La tour Eiffel (@LaTourEiffel) September 18, 2021
? @TheatreChaillot#ChaillotExperience pic.twitter.com/T0A7eypqf4